Pages

Monday, 12 November 2012

புற்று நோய்...!புற்றுநோய்  என்பது கட்டுப்பாடற்று உடலின் செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன.  பிற நோய்களை போலல்லாமல் நமது செல்களே நமக்கு எதிரியாக உருமாறும் ஒரு கொடுமை தான் இந்த புற்றுநோய். புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

இந்த புற்றுநோய் செல்களை அழிப்பது சற்று சிரமமான காரியம் தான். 

ஏன்?

ஏனெனில் இவை நமது செல்கள். இவற்றை அழிக்க முற்படுவது நம்மை நாமே அழிக்க முற்படுவதற்கு சமம். சிகிட்சையின் போது சேர்ந்தே அழிக்கப்படும் நமது உடலின் நல்ல செல்களையும் கணக்கில் கொண்டே மிகவும் ஜாக்கிரதையாக சிகிட்சை செய்ய வேண்டும்.

புற்றுநோயின் வகைகள்:
உடலின் இந்த பகுதியில் தான் வரும் என்று நிச்சயித்து சொல்ல முடியாதது இந்த புற்றுநோய். இவற்றில் பல வகைகள்.
1. மூளை புற்றுநோய்
2. மார்பக புற்றுநோய்
3. சரும புற்றுநோய்
4. ரெத்த புற்றுநோய்
5. குடல் புற்றுநோய்
6. சிறுநீரக புற்றுநோய்
7. வாய் புற்றுநோய்
இன்னும் இன்னும், உடலில் இவை தோன்றாத இடங்களே இல்லையென்று சொல்லலாம்.

சிகிட்சை முறைகள்
சரி, இனி இவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிட்சை முறை பற்றி சிறிது பார்ப்போம்.
மூன்று விதமான சிகிட்சை முறைகளை இதற்காக கையாளுகிறார்கள்.
1. அறுவை சிகிட்சை
2. கதிரியக்க சிகிட்சை
3. மருந்து மாத்திரைகள் மூலம் சிகிட்சை

மூளை புற்றுநோய்:
புற்றுநோய் வகைகளிலே நான் மூளை புற்றுநோய் பற்றி இங்கு கொஞ்சம் விளக்கலாம் என்று நினைக்கிறேன், காரணம், மற்ற புற்றுநோய் வகைகளை விட இது கொஞ்சம் ஆபத்தானது.

மூளை புற்றுநோயின் அறிகுறிகள்:
1. தலை வலி
2. வாந்தி
3. சமன் படுத்தி நடப்பதில் சிரமம்
4. மனநிலை குழப்பங்கள்
5. நியாபக மறதி
6. வார்த்தைகளில் தடுமாற்றம்
7. பார்வை மற்றும் கேட்கும் திறனில் குறைபாடு.


இத்தகைய அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் நீங்கள் உங்கள் குடும்பநல மருத்துவரை அணுகி உடலை பொது ஆய்வு செய்து கொள்ளுதல் அவசியம்.

சரி, இதற்கான காரண காரியங்கள், இதன் பூர்வீகம் என்று அலசாமல் புற்றுநோய் வந்தால் செய்ய வேண்டியது என்னவென்று பார்ப்போம்.
ஆரம்பநிலை புற்றுநோயைப் பற்றி இங்கு விளக்கவும் தேவையில்லை, நல்லவிதமான ஒரு மருத்துவ சிகிட்சையினால் அவர்களில் பெரும்பான்மையோர் காப்பாற்றப்பட்டு விடுகிறார்கள்.

புற்றுநோயை பற்றிய தகவல்களை எங்கு தேடினாலும் விலாவாரியாக அதனைப் பற்றி விவரித்து விட்டு முற்றிய நிலையில் குணப்படுத்துவது கடினம் என முடித்து விடுகின்றனர். அல்லது, முடிவு பற்றி சொல்லி விட்டு தொடக்க காலங்களை அலச ஆரம்பித்து விடுகின்றனர்.

இவ்வாறாக கைவிடப்பட்ட (மருத்துவர்களால்) புற்று நோயாளிகளுக்கு என்னதான் வழி?

இவர்களை குணப்படுத்த முடியுமா?

இதற்கான பதிலை ஆம் என்றோ இல்லை என்றோ ஒற்றை சொல்லில் முடித்து விட நான் விரும்பவில்லை.

புற்றுநோய் தாக்கப்பட்டவரின் பிரச்சனைகள்:
புற்றுநோய் தாக்கப்பட்ட செல்களை மருந்துக்களால் அழிக்க முற்படும் போது கூடவே பக்கவிளைவுகளும் சேர்ந்தே ஒட்டிக்கொள்கின்றன.

இவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை தான் என்ன?
இவற்றை நாம் உடல்நிலை சார்ந்த பக்க விளைவுகள், மனநிலை சார்ந்த பக்கவிளைவுகள் என பிரித்துக் கொள்ளலாம்.

உடல்நிலை சார்ந்த பக்கவிளைவுகள்:
1. உடலின் வலி
2. அசாதாரண சூழ்நிலைகளில் புறவெளி ரெத்த போக்கு
3. சோர்வு
4. மயக்கம்
5. எந்த நோய்கிருமி தாக்குதலுக்கும் சுலபமாக இலக்காகுதல்
6. மற்ற நோய்களுக்கான சிகிட்சை முறைகள் பயனளிப்பதில் தாமதம்
7. இன்னும் பிற

மனநிலை சார்ந்த பக்கவிளைவுகள்:
1. அலட்சியம்
2. ஒரு வித படபடப்பு
3. சொன்னதையே திரும்ப கூறுதல்
4. அழுகை
5. கோபம்
6. அடம்
7. சுயபட்சாதாபம்
8. இன்னும் பல

சில மருத்துவ சிகிட்சை முறை இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பது உண்மை தான், ஆனால் அந்த மருந்துக்களின் வீரியம் நம்மை சோர்வடைய வைக்கும் போதெல்லாம் நம்மின் உற்சாகம் அதனை வென்றெடுக்கட்டும்.

இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு முதலில் நான் சில விஷயங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
1. முதலில் நீங்கள் உங்களை நேசியுங்கள்.
2. நான் ஒரு நோயாளி என்ற எண்ணத்தை மனதில் இருந்து நீக்குங்கள்.
3. நோய் என்பது உடலில் தான், மனதில் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. மனதினை ஒருநிலை படுத்துங்கள்.
5. உங்களுக்கு தேவை எதுவென நீங்களே முடிவு செய்யுங்கள்.
6. மனதிற்கு பிடித்தமான விசயங்களில் கவனத்தை செலுத்துங்கள்.

மனநிலை சார்ந்த பக்கவிளைவுகளால் அவதி படுபவர்களுக்கு:
1. மனமே மருந்து என்பதை மறந்து விட வேண்டாம்.
2. மறதி உங்களை அடிக்கடி தொல்லை படுத்தினால் அதனை மறக்க முயற்சி பண்ணுங்கள். எந்த காரணம் கொண்டும் அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம்.
3. அமிலத் தன்மை நிறைந்த உணவை தவிர்த்திடுங்கள்.
4. புற்றுநோய் என்பது மனம், உடல், ஆன்மா சாந்த ஒரு நோய். எனவே மனதை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திடுங்கள். அது புற்றுநோய்க்கு எதிரான உங்கள் உடலின் யுத்தத்தை விழிப்போடு வைத்திருக்கும்.
5. கோபம், மன்னிக்கும் குணம் இல்லா வன்மம், சுயபச்சாதாபம் போன்றவை உங்கள் உடலை பிராண வாயுவற்ற அமில தன்மைக்கு இழுத்துச் செல்லும். எனவே மனதை அன்பால் நிறைத்திடுங்கள்.
6. ஆழ்ந்த அமைதியும் மகிழ்ச்சியும் கலந்த வாழ்வை அனுபவியுங்கள்.
7. புற்றுநோய் செல்களால் பிராணவாயு இருக்குமிடத்தில் வாழ முடியாது, எனவே அடிக்கடி மூச்சை நன்கு இழுத்து விட்டுக்கொள்ளுங்கள்.
8. வாழ்க்கையின் ஏதேனும் ஒரு லெட்சியத்தை மனதில் நிறுத்தி அதனை அடைய தீவிரமாக போராடுங்கள். உங்கள் லட்சியம் நோக்கி நீங்கள் பயணிக்கும் வேகத்தில் புற்றுநோய் புறம் தள்ளப்பட்டு வேடிக்கை மட்டுமே பாக்க வேண்டும்.

புற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர், சுற்றம் மற்றும் நண்பர்கள் கவனத்திற்கு:
1. அவர்களை ஒரு நோயாளியாய் பார்ப்பதை தவிருங்கள்
2. சோகம் அவர்களை மட்டுமல்ல, உங்களையும் தாக்காது இருக்கட்டும்
3. அவர்களை சூழ்ந்த சுற்றுபுறத்தை உற்சாகமாக வைத்திருங்கள்
4. அவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்துங்கள்
5. அச்சம் உண்டு பண்ணும் தன்னம்பிக்கை இழக்கச் செய்யும் கதைகளை பேசுவதை தவிர்த்திடுங்கள்
6. குடும்ப பொறுப்புகளை பகிர்ந்தளியுங்கள்
7. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆலோசனைகள் கேளுங்கள்

எல்லாவற்றிலும் மேலாக:
மரணம் எந்த நேரத்திலும் வரலாம் என்ற நிலையில் அதனை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராகவே இருக்க வேண்டும். மரணம் நிச்சயம் என்று மனம் உணரத்துவங்கி விட்டால் மனதை ஒருநிலை படுத்துங்கள்.
1. இத்தனை நாள் வாழ வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்
2. வலிகள் இல்லாத மரணத்தை எதிர்நோக்க தயாராகுங்கள்
3. ஒரு வேளை அந்த தருணம் வலிகள் நிறைந்ததாய் இருந்தால் வலிகள் தாங்கும் பக்குவம் பெறுங்கள்
4. பிரியமானவர்களின் (தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், மகள் இப்படி யார் வேண்டுமென்றாலும்) அருகாமை உங்களுக்கு தைரியத்தை கொடுக்கும், அவர்களோடு உங்கள் நிமிடங்களை செலவிடுங்கள்.
5. புன்னகையோடு மரணத்தை எதிர்நோக்கும் வலிமையை மனதிற்குள் உருவாக்குங்கள்... மற்றபடி நீங்களும் வாழ்க்கையை வாழப்பிறந்தவர் என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்...!

11 comments:

 1. கான்சர் யாருக்குமே வரக்கூடாது

  ReplyDelete
  Replies
  1. வரக்கூடாது என்பது உண்மைதான் நண்பரே, ஆனால் வந்து விட்டால் என்ன செய்வது என்பது தானே கேள்வி...

   Delete
 2. அச்சம் உண்டு பண்ணும் தன்னம்பிக்கை கொடுக்கும் கட்டுரை

  ReplyDelete
 3. பன்நெடுங்காலமாகவே மனித சமுதாயம் புற்று நோயினோடு மோதி தோற்று போய் நிற்கிறது

  http://chenaitamilulaa.bigforumpro.com/t596-topic

  ReplyDelete
  Replies
  1. இயற்கையின் மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இது மாதிரியான தோல்விகள் தவிர்க்க முடியாததாய் போய் விடுகிறது... உண்மை நண்பரே

   Delete
 4. Dhanam Shekar ( http://www.facebook.com/dhanamshekar ) மூன்று வயது சின்ன குழந்தைகளையும் புற்றுநோய் விட்டு வைக்கவில்லை. அவர்களிடம் என்ன கெட்ட பழக்கமும் இல்லை.ஆனால் தாக்குகிறது...அளவுக்கு அதிகமாக நோய்களை பற்றியும், உணவு வகைகளை பற்றியும் சிந்தித்து மனபலத்தை கெடுக்காமல், இருப்பது நல்லது. நாற்பது வயதுக்கு மேல், ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்றாற்போல் மருத்துவரின் ஆலோசனை படி, உணவில் சில கட்டுப்பாடு வைப்பது நோயை குறைக்கும். அதற்கு மேல்.....வருவது வரட்டும்..ஒரு கை பார்க்கலாம். 'பயம் நோயை பலப்படுத்தும்.'

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, நீங்கள் சொல்வதும் சரியானதே. ஆனாலும் இந்த கட்டுரை நிச்சயமாக அவர்களின் தனம்பிக்கையை குலைப்பதற்காக இல்லை. மூன்று வயது சின்னக் குழந்தை நிச்சயம் இந்த கட்டுரையை படிக்க இயலாது. அவற்றிக்கு பயம் என்றால் என்னவென்றும் தெரியாது. நீங்கள் சொல்வது போல் நோயை வருத்திக்கொள்ள நான் சொல்லவில்லை, இறுதியாக நீங்கள் சொல்வதை தான் நானும் சொன்னேன் //அதற்கு மேல்.....வருவது வரட்டும்..ஒரு கை பார்க்கலாம். 'பயம் நோயை பலப்படுத்தும்//

   Delete
 5. my wife is going to have laproscopic wipple surgery at deodinam CBD , pancreas duct area called periampulary adenocarninoma limpotic emboli , i am in lot of pain and confusion, this essay gives me not just relief also solace . i want to comeout from this cancer problem and to save my family happily. i pray God to help my wife to get well soon after this surgery . i request everyone to pray for her to speedy recovery and cure . i request all.
  s.u.babu ,coimbatore

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் பிரார்த்திப்போம் சகோ.... உங்கள் மனைவி சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப எங்கள் அனைவரின் பிரார்த்தனைகள்

   Delete