Pages

Thursday 11 October 2012

புட்டிப்பாலும் குழந்தை வளர்ப்பும்...


2003 - நவம்பர் மாதம். அது நான் திருமணம் முடிந்து கணவர் வீட்டில் காலடி எடுத்து வைத்த மாதம். அப்பொழுது என் கணவரின் சகோதரிகளில் ஒருவரின் குழந்தையின் வயது ஆறு மாதம்.

ஒருநாள், வழக்கம் போல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது திடீரென குழந்தை அழவே, ஏற்கனவே தயாராய் இருந்த புட்டிப் பாலை ஊட்டத் துவங்கினார் என் நாத்தனார்.

"என்ன அண்ணி, தயார் செய்த பாலை அரை மணி நேரத்தில் குழந்தைக்கு ஊட்ட வேண்டுமே, இந்த பால் கெட்டு போயிருக்காதா" என நான் கேட்க, "அதெல்லாம் ஒன்றும் ஆகாது, நான் ஏற்கனவே இப்படி தான் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்" என பதிலளித்து என்னை பதற வைத்தார்.

பின்னர் வந்த நாட்களில் அந்த பால் புட்டியையும், அதனுள் இருக்கும் பாலையும் கண்காணிக்க துவங்கி விட்டேன் நான்.

முதலில் அந்த பால் புட்டியை அவர்கள் கழுவிய விதம் பார்ப்போம். 

  1. குழந்தை குடித்து முடித்த பால் புட்டியை திறந்து, தண்ணீரில் கழுவாமல் அப்படியே சூடாக இருக்கும் வெந்நீரில் போடுகின்றனர். 
  2. புட்டியில் இருக்கும் பால் வெந்நீரில் கலந்து அது வெண்மையாகிறது.
  3. பின் அந்த புட்டியை எடுத்து பச்சைத்தண்ணீர் விட்டு அலசுகின்றனர்.
  4. புட்டிப்பால் சுத்தப்படுத்துதல் சுபம்.
இனி அவர்களின் பால் தயாரிப்பு முறை பற்றி பார்க்கலாம். 
  1. தண்ணீரை நன்றாக சூடாக்குகிறார்கள்.
  2.  அது கொதித்ததும் குறைந்த அளவு பால் பவுடரை (பால் பவுடர் விலை ஜாஸ்தி, எனவே அதை சிக்கனமாக  (?) பயன்படுத்துகிறார்களாம்) போட்டு நன்றாக நுரை வர அடித்து ஆற்றுகிறார்கள். 
  3. பின் அதனை முன்பே கழுவி எடுத்து வைத்த புட்டியில் அடைத்து வைத்து விடுகின்றனர். 
  4. எவ்வளவு நேரமானாலும் பால் முழுவதையும் குழந்தை குடித்து முடித்த பின்பே மறுபடி புட்டியை கழுவ தயாராகிறார்கள். 
இத்தகைய புட்டிப்பால் புகட்டலை என் உறவினர் மட்டும் தான் செய்தாரா? 

கண்டிப்பாக இல்லை...!

நம்மில் பெரும்பான்மையானோர் இதை தான் செய்துக் கொண்டிருக்கிறோம். 
அதிகம் படிக்காத, கிராம சூழ்நிலையில் வளர்ந்த என் நாத்தனாராவது பரவாயில்லை, இன்று படித்த, நகரத்து சூழ்நிலையில் வளர்ந்த அன்னையரும் கிட்டத்தட்ட இதை தான் செய்துக் கொண்டிருக்கின்றனர். 

சரி, இனி புட்டிப்பால் தயாரிக்கும் சரியான முறையை பார்க்கலாம். 

பால் புட்டி கழுவும் முறை:
  1. குழந்தைக்கான புட்டிப்பால் தயாரிக்கும் முன்பு கைகளை நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும். 
  2. குழந்தை குடித்து முடித்த புட்டியை (பாகங்கள் பிரித்து), அதிலிருக்கும் பால் முற்றிலும் நீங்கும் வரை தண்ணீரில் கழுவவும்.
  3. பின்னர் அவற்றை வெந்நீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். 
  4. பயன்படுத்தும் வரை புட்டியை அப்படியே வெந்நீரில் போட்டு மூடி வைக்கவும். 
புட்டிப்பால் தயாரிக்கும் முறை:
  1. தண்ணீரை ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.
  2. உங்கள் குழந்தையின் தேவைக்கேற்ப கொடுக்கப்பட்ட அட்டவணையில் இருந்து அளவான தண்ணீரை தெரிந்துக் கொள்ளவும்.
  3. தண்ணீரை நன்றாக ஆற்றி, மிதமான சூட்டில் தேவையான அளவு பால் புட்டியில் விட்டுக்கொள்ளவும்.
  4. அட்டவணை பார்த்து, தண்ணீருக்கு தேவையான அளவு பால் பவுடரை புட்டியில் போடவும். 
  5. புட்டியை நன்றாக மூடி, பால் பவுடரையும், தண்ணீரையும் கலரும் படி குலுக்கவும். 
  6. உடனடியாக குழந்தைக்கு புகட்டவும். 
  7. அரைமணி நேரம் வரை அந்த பாலை பயன்படுத்தலாம்.

இதில் பலருக்கும் வரும் சந்தேகம்:
  1. பச்சை மாவை நன்றாக அவித்து தானே குழந்தைக்கு கொடுக்க வேண்டும்? இல்லையென்றால் குழந்தைக்கு ஜீரணம் ஆகாதே...!
  2. அரைமணி நேரம் தாண்டி ஏன் அந்த பாலை பயன்படுத்த கூடாது? காசு விரயம் ஆகுமே?
இதோ விளக்கம்:
  1. உங்கள் குழந்தை உணவு மிக மிக பாதுகாப்பாக சுத்தமான முறையில் செரிவூட்டப்பட்டே தயாரிக்கப்படுகிறது.
  2. குழந்தைக்கு தேவையான புரத சத்தும், விட்டமின் சத்துக்களும், ஏனைய தாதுக்களும் கலந்தே அது தயாரிக்கப் படுகிறது. 
  3. கொதிக்கும் வெந்நீரில் அதை ஆற்றினால் அதில் இருக்கும் அத்தனை ஊட்டச் சத்துக்களும் சூட்டில் அழிந்து போகின்றன. 
  4. எனவே அப்படி தயாரிக்கப்பட்ட புட்டி பால், சத்துக்கள் ஏதுமில்லாமல் வலுவிழந்து போகின்றது. 
  5. புட்டி பால் தயாரிக்கப்பட்ட அரைமணி நேரத்தில், பாக்டீரியாக்கள் அதில் வளர ஆரம்பிக்கின்றன. 
  6. பால் பவுடரில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் அவற்றுக்கு சிறந்த தீனியாகி, இந்த பாட்டீரியாக்கள் பல்கி பெருகுகின்றன. 
  7. இந்த பாக்டீரியாவினால் குழந்தையின் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது (உதாரணம்: வயிற்றுப்போக்கு).
எனவே, குழந்தைக்கு புட்டிப் பால் புகட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக அவர்கள் பயன்படுத்தும் பால் பவுடர் அட்டை மேல் இருக்கும் விபரங்களை தெளிவாக படித்து அதன் படி நடந்துக்கொள்ள வேண்டும். 

எல்லாவற்றிக்கும் மேலாக தாய்ப்பால் இருக்க புட்டிபாலின் அவசியம் எதற்கு என்றும் சிந்திக்க வேண்டும். 


11 comments:

  1. இதுக்கும் அதேதான், முழுசா ஆற அமர படிச்சிட்டு அப்புறமா எனது கருத்தை சொல்லுறேன் மேடம் !

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா படிச்சுட்டு இருக்கீங்க சார்?

      Delete
  2. ஹஹா... பின்னிட்டீங்க போங்க, ஆனா பல வீடுகளிலும் இன்னும் சரியான அவர்னஸ் இல்லைதான்... சூப்பர் பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி. உண்மை தான் காயத்ரி

      Delete
  3. ஒருபால் புட்டிய கழுவுரத்தில் இவ்வவளவு விஷயமா?
    இதுவும் தேவைதான், ஏன்னா......இன்றைய காலத்து பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது என்பது மலைஎறிப்போன விஷயம்!
    அப்படியே பொதுவான(பெண்கள் சம்பந்தமா மட்டும் இல்லாம) விழிப்புணர்வு சம்பந்தமா நிறைய எழுதுங்க மேடம் !!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... உண்மை தான்

      Delete
  4. //http://www.facebook.com/tpusatheesh// Satheesh Kumar நிதானம் அது தானத்தில் சிறந்தது .......அவசர உலகில் இதை புரிந்தவர்கள் ....நலமுடன் வாழ்வார்கள் ..........
    October 16 at 9:29am

    ReplyDelete
    Replies
    1. ஆம், நன்றி சதீஷ் குமார்

      Delete
  5. நீங்க முகனூலில் இருக்கீங்களா மேடம், எங்க வீட்டு இந்த இலாகாவில் நான் தலையிடுவதில்லை

    ReplyDelete
  6. தங்கள் பதிவுகள் எல்லாமே விழிப்புணர்ச்சி மிக்கதாகவே உள்ளது. தொடர்ந்து
    எழுதுங்கள் சகோதரி .

    ReplyDelete
  7. சகொதரிக்கு நன்றி. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    ReplyDelete