சரி, முதலில் மாதவிடாய் என்றால் என்னவென்று பார்ப்போம்
ஒரு பெண் பூப்பெய்திய நாளிலிருந்து அவளின் மாதாந்திர சுழற்சியில் மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரை உதிரப்போக்கு இருந்தால் அது முறையான அல்லது ஒழுங்கான மாதவிடாய் எனப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிக்க அவசியமாக அவள் இனபெருக்க சுழற்சியின் ஒரு அங்கமாகவே இந்த மாதவிடாய் நிகழ்கிறது.
பொதுவாக மாதவிடாய் காலமாக 24-29 நாட்களை சொன்னாலும் 23-35 நாட்களுக்குள் வரும் மாதவிடாயை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
உதிரப்போக்கை பொருத்தவரை அது பெண்களுக்கு பெண்கள் மாறுபடுகிறது. இதில் வலிகளும் உதிரப்போக்கும் தாங்கிக்கொள்ளத்தக்க வகையில் இருந்தால் அதில் பிரச்சனை இல்லை.
ஆனால் இன்றோ பெரும்பாலான பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையை சந்திக்கின்றனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்குள்ளாகவே இரண்டிலிருந்து மூன்று முறை மாதவிடாய் வருகிறது. அல்லது வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து மாதவிடாய் சுழற்சியை மட்டுமே சந்திக்கின்றனர்.
இதற்கான காரணங்கள் என்னவாய் இருக்கின்றன?
- அதிகபடியான உடல் பருமன் / உடல் இளைப்பு
- நீண்ட நேர உடற்பயிற்சி
- சத்துணவு குறைவு (அல்லது) மாவு சத்து அதிகமுள்ள உணவு உட்கொள்ளுதல்
- மது பழக்கம்
- புகைப் பழக்கம்
- போதை மருந்து பழக்கம்
- அதிகப்படியான மன அழுத்தம்
- சீதோசன நிலை மாற்றங்கள்
- ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்களின் அளவு மாறுபடுதல்
- ஒன்றுக்கும் மேற்பட்ட சூலக கட்டிகள் (பாலி சிஸ்ரானிக் ஓவரி)
- கர்ப்பப்பை கோளாறுகள் (கர்ப்பப்பை கட்டிகள் (fibroids/cysts/polyps), கருப்பை வீக்கம் (endometriosis)
- பிற நோய்களுக்கான மருந்துண்ணல்
- புற்றுநோயாளிகளுக்கான கீமோதெரபி
- குழந்தை பெற்ற சில மாதங்கள், கருகலைப்பு, தவறான இடத்தில் கருத்தங்கல்
- குழந்தைகளுக்கு பாலூட்டல்

மன அழுத்தம் ஒரு பெண்ணின் உடலின் ஹார்மோன் சுரத்தலை ஓன்று அதிகரிக்கிறது இல்லை மட்டுப்படுத்துகிறது. மேலும் கார்டிசால் என்னும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இந்த கார்டிசால் செக்ஸ் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜனையும் ப்ரோஜெஸ்ட்டிரானையும் சரி விகிதத்தில் சுரக்க விடாமல் தடுக்கிறது. எனவே தான் ஒழுங்கற்ற மாதவிடாய் வருகிறது.
அடுத்து பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பாலி சிஸ்ரானிக் ஓவரி (Polycystic ovary syndrome ) எனப்படும் சூலக கட்டிகள். இவை ஒரு பெண்ணின் கருமுட்டை உருவாவதில் பிரச்னையை உண்டு பண்ணுகின்றன. இதனால் அவளின் சராசரி மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனால் அப்பெண் பொடுகு, அதிகபட்ச உடல் பருமன், முகம் மற்றும் உடலில் அதிக முடி வளர்த்தல், மற்றும் மலட்டுதன்மையால் பாதிக்கப்படுகிறாள். மேலும் இந்நிலை நீடிக்கும் போது கர்ப்பப்பை வீக்கம், கர்பப்பை புற்றுநோய், இதய நோய் போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
சில பெண்களுக்கு இந்த பாலி சிஸ்ரானிக் ஓவரி எனப்படும் சூலக கட்டிகள் தோன்றாமலே கர்ப்பபை வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை நாம் இடமகல் கருப்பை அல்லது எண்டோமெட்ரோசிஸ் (endometriosis) என்கிறோம்.
பொதுவாக எண்டோமெட்ரோசிஸ் இருந்தால் அறிகுறிகள் எதைவும் தோன்றுவதில்லை. மாதவிடாய் நேரங்களில் வலிகளும் வருவதில்லை. அதிகபடியான உதிரப்போக்கே இதன் அறிகுறியாக உள்ளது. அதையும் தாண்டி சிலருக்கு இது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
இந்த எண்டோமெட்ரோசிஸ் என்றால் என்ன?
எண்டோமெட்ரியம் (endometrium) எனபது கர்ப்பப்பையின் உள்ளே வளரும் ஜவ்வு போன்ற தசை செல்களாகும். இது மாதாந்திர சுழற்சியின் போது கருவுறும்
வாய்ப்புற்றால் கருவை தாங்கி பிடிக்கும் சக்திக்காக கர்ப்பப்பையின் உட்புறம் உருவாகுகின்றன. அவ்வாறு உருவாகும் போது கர்ப்பப்பையின் சுவர் திண்ணமாகிறது. கரு உருவாகாது போகும் பட்சத்தில் இவை சிதைந்து உதிரப்போக்கோடு வெளியேறுகின்றன. இந்த எண்டோமெட்ரியம் சில நேரங்களில் எதிர்பாராவிதமாக கருப்பையின் வெளிசுவரிலும் வளரத் துவங்குகின்றன. இத்தகைய நிலையை தான் நாம் எண்டோமெட்ரோசிஸ் என்கிறோம்.

எண்டோமெட்ரியம் கருப்பையின் வெளிச்சுவர்களிலும் இடுப்பு மற்றும் அடிவயிற்றிலும் சில சமயங்களில் மூளையை சுற்றியும் வளர்வதற்கு இது தான் காரணம் என்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் சில காரணங்களை கூறலாம்
- மாதவிடாய் நேரங்களில் வெளிப்படும் உதிரம், கருக்குழாய் வழியாக பின்னோக்கி பாய்வதால் எண்டோமெட்ரியம் செல்கள் கர்ப்பப்பை விட்டு வெளித்தள்ளப்படுகின்றன. அப்படி வெளியேற்றப்பட்ட செல்கள் கர்ப்பப்பையின் வெளியே வளர்கின்றன.
- இடுப்பை சுற்றியுள்ள மரபியல் செல்கள் (primitive cells) ஒரு கட்டத்தில் எண்டோமெட்ரியம் செல்களாக வளர்ச்சியடைகின்றன
- அறுவை சிகிச்சை செய்யும் போது எண்டோமெட்ரியம் செல்கள் வெளியாகி அறுவை சிகிச்சை நடந்த இடத்தை சுற்றி வளரலாம்
- எலும்பு மஜ்ஜையிலிருந்தும் வெளியேறி இவை தனியாக வளரலாம்
கருப்பை வீக்கம் இருக்கும் பெண்களுக்கு வரும் பிரச்சனைகள்:
- அதிகப்படியான வயிற்றுப்போக்கு
- முதுகு வலி
- சிறுநீரில் ரெத்தம்
- கருமுட்டை வெளிப்படும் போதும் மாதவிடாய் நாட்களிலும் தாங்க முடியாத வயிற்று வலி (இதில் பலருக்கு மாதாந்திர வலியின் வீரியம் மாதத்திற்கு மாதம் வேறுபடவும் செய்யும்)
- ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
- அதிக உதிரப்போக்கு
- அவ்வபோது அடி வயிற்றில் வலி (கை பட்டாலே சிலருக்கு அதிக வலி இருக்கும்)
- குழந்தையின்மை
- அபூர்வமாக நெஞ்சு வலி, இருமும் போது ரத்தம், தலைவலி, உடல் சோர்வு போன்றவையும் ஏற்படும்
இந்த எண்டோமெட்ரோசிஸ்சை கண்டறியும் வழி என்ன?
பெரும்பாலான நேரங்களின் அதிகப்படியான உதிரப்போக்கும், தாங்க முடியாத வயிற்று வலியும் இருந்தால் மருத்துவருக்கு எண்டோமெட்ரோசிஸ் கருப்பை இருக்குமோ என்ற சந்தேகத்தை கொடுக்கிறது. அல்ட்ராசவுண்ட் இமேஜிங் ஆய்வுகள் மூலம் இதனை கண்டறிந்தாலும் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திசு ஆய்வு செய்து எண்டோமெட்ரியம் செல்கள் இருக்கிறதா என்று பார்கின்றனர். ஆனாலும் லாப்ரோஸ்கோப்பி மூலம் நேரடி ஆய்வு செய்தே இதனை உறுதி செய்ய முடியும்.
எண்டோமெட்ரோசிஸ் கருப்பைக்கான சிகிச்சை முறைகள்
பொதுவாக எண்டோமெட்ரோசிஸ் முற்றிலும் குணப்படுத்த முடியாதென்றாலும் மருந்துக்கள் மூலமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இந்த சிகிச்சை நோயாளியின் தேவை பொருத்து மாறுபடுகிறது. அதாவது வலி மட்டும் குறைய வேறு விதமாகவும் கருவுற்றல் நிகழ வேறு முறையிலும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பலதரப்பட்ட சிகிச்சை முறைகள் இருந்தாலும் முக்கியமானவற்றை மட்டும் இங்கு காண்போம்
1. வீக்கத்துக்கு எதிரான ஸ்டீராய்டு அல்லாத மருந்துகள் (Nonsteroidal anti-inflammatory drugs)
பொதுவாக இவை எண்டோமெட்ரியம் செல்கள் மேலான எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக ப்ராஸ்டாகிளான்ட்டின் (prostaglandin) உற்பத்தியை மட்டுபடுத்தி வலியின் வீரியத்தை குறைக்கின்றன. வலிகளை தூண்டி விடுவதில் இந்த ப்ராஸ்டாகிளான்ட்டினுக்கு பெரும்பங்கு உண்டு. பொதுவாக நாப்ரோசென் அல்லது இபுப்ரோபன் (naproxen or ibuprofen) வலிநிவாரணியாக அளிக்கப்படுகிறது.
2. கோனாடோட்ரோபின் வெளியீட்டு நொதி ஒப்புமைகள் (Gonadotropin-releasing hormone analogs (GnRH analogs))
இவை நிவாரணியாக மட்டும் செயல் படாமல் எண்டோமெட்ரியம் செல்களை கட்டுபடுத்தவும் செய்கின்றன. இவை ஈஸ்ட்ரோஜன் சுரப்பை நிறுத்தி மாதவிடாயை தடுக்கிறது. இதனை உட்கொள்வதால் சிலருக்கு பக்க விளைவுகளாக ஒழுங்கற்ற ரெத்தப்போக்கு, மனநிலை மாற்றங்கள், சோர்வு போன்றவை ஏற்படலாம். ஆனாலும் சிறிதளவு ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரோன் கலவைகளை மாத்திரையாக உட்கொண்டால் இந்த பக்க விளைவுகள் சரி செய்யப்படும்.
3. வாய்வழி கருத்தடை மாத்திரைகள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன்)
இவை மாதவிடாய் சுழற்சியை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்ட கருத்தடை மாத்திரைகளாகும். இவற்றை குறிப்பிட்ட கால அளவு (21 நாட்கள்) எடுத்து சிறிது இடைவெளி விட்டால், நான்காம் நாளிலிருந்து மாதவிடாய் வரும். பின் மாதவிடாய் வந்த ஐந்தாம் நாளிலிருந்து மீண்டும் தொடர்ச்சியாக 21 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்டோமெட்ரோசிஸ்க்கான மிக சிறந்த சிகிச்சையாக இது இருக்கிறது. ஆனால் இது கருத்தரித்தலை தடுக்கும். சிலருக்கு இதனால் உடல் பருமன், உடல் சோர்வு, தலைசுற்றல், வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
4. அறுவை சிகிச்சை
