நண்பர்கள் என்றால் வேப்பம்பூ கசப்பாய் இருந்தது என் குழந்தை பருவம். அதிலும் பசங்க என்றால் கேட்கவே வேண்டாம், அவர்கள் பக்கம் திரும்புவது கூட கிடையாது. ஏனோ தனிமை மட்டுமே எனக்கு உற்ற தோழியாய் இருந்தது. யாரிடமும் பேசுவதில்லை, ஒரே ஒரு தோழி, அவளும் பல சமயம் பராமுகம் தான், நான் பேசினால் தானே அவளும் பேசுவாள், தவறு என்மேல் தான்.
மீண்டும் அதே பள்ளியில் தொடரமுடியா வண்ணம் அங்கு அதற்குமேல் வகுப்புகள் அங்கு இல்லை. எனவே வேறு பள்ளியில் எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தேன்.
முதல் நாள் பள்ளி வாகனத்தில் வைத்து என் முதல் தோழி அறிமுகம் ஆனாள். வகுப்பறையில் நுழைந்தவுடன் அதிர்ச்சி. அவள் அதிகம் சென்று உரையாடியது மாணவர்களிடம் தான். அவள் என்னை தோழியாக அறிமுகபடுத்தியதால் என்னையும் சூழ்ந்து கொண்டனர் அவர்கள். கைகுலுக்க நீட்டிய அவர்களின் கை பார்த்து பின்னால் ஒளிந்த என் கை வலுக்கட்டாயமாக குலுக்கப்பட்டது.
பின்வந்த நாட்கள் சற்று பதற்றம் நிறைந்ததுதான். தினமும் எங்களுக்கு வாசலில் வரவேற்பு. என் தோழியோ அவர்களோடு ஒன்றி விடுவாள். தனித்திருக்கும் நான் அவர்களுக்கு பொழுதுபோக்காகி விடுவேன்.
என் முன்னால் இருக்கும் இருக்கையில் என்னை நோக்கி அமர்ந்தபடி என் முகத்தையே பார்த்து கொண்டிருப்பான் ஒருவன், ஏண்டா இப்படி செய்கிறாய் என்று கேட்டால் நீ சிரித்தால் அழகாய் இருக்கிறாய், உன் சிரிப்பை காண தவமிருக்கிறேன் என்பான். என் உள்மனதில் மிகப் பெரிய யுத்தம் நடந்து கொண்டிருந்தது.
யாரிடம் இதை சொல்லி அழுவது என்று அந்த வயதில் எதுவும் புரியவில்லை. அதே நிலை மேலும் பத்து நாட்கள் நீடிக்கவே, கவலையோடு வீட்டுக்கு வந்தேன். வீட்டில் அப்பா வேறு என்னை திட்டவே வேதனையோடு என் அறையில் சென்று அமர்ந்தேன்.
இனியும் நான் உயிர் வாழ தான் செய்யணுமா? ஏன் இறைவா என்னை சோதிக்கிறாய் என்று அதுவரை வணங்காத தெய்வத்திடம் முறையிட்டேன். இனியும் நான் வாழ்வது சரியில்லை என்று முடிவு மனதில் விஸ்வரூபம் எடுத்தது.
எங்கள் வீட்டு கழிவறையில் ஆசிட் இருப்பது நினைவு வர ஒரு முடிவோடு ஓடி சென்று கழிவறை கதவை மூடினேன். பின்னாலேயே ஓடி வந்த என் தாய் தடுப்பதற்குள் ஆசிட் என் வாய்க்குள், பின் வயிற்றுக்குள்.
ஒருவாரம் கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட்ட நான் அம்மாவிடம் நடந்தவைகளை கூறி அழுதேன், அம்மா சிரித்து கொண்டே சொன்னார்கள், உன் வகுப்பு தோழர்கள் தானே, அவர்கள் சிரிக்க சொன்னால் சிரித்து விட்டு போ, அதனால் உனக்கு எந்த பாதிப்பும் வரபோவதில்லை என்று.
மீண்டும் அதே பள்ளி. தனிமையில் அமர்ந்தபடி எதையோ வெறித்து கொண்டிருந்த என் தோள்களில் நான்கைந்து கைகள். என் தோழியும், கூடவே அவள் தோழர்களும். என் கைகளை பற்றியபடி என் காலருகே அமர்ந்து கொண்டனர். சற்று நேரம் யாரும் பேசவில்லை. அவர்கள் கண்களில் கண்ணீர்.
உன்னை வேதனை படுத்த நாங்கள் உன்னை கிண்டல் பண்ணவில்லை. நிஜமாகவே நீ சிரித்தால் அழகாக இருக்கிறாய். நீ என்றும் சிரித்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை, எங்களை மன்னித்து விடு என்று கண்களில் கண்ணீரோடு கலங்கி நின்றனர்.
மறுநாள் என்னை பார்த்தவுடன் தலைகுனிந்து ஒதுங்கி செல்லும் அவர்களை பார்த்து முதல்முதலாக சிரிப்பு வந்தது. அந்த சிரிப்பு என் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க போவதை அறியாமலே அவர்களை பார்த்து மீண்டும் புன்னகைத்தேன்.
அன்று ஆரம்பித்த புன்னகை, பின் கிண்டல், கலாட்டா, பக்கத்து பள்ளி மாணவர்களுடன் அடிதடி சண்டை, பள்ளி முதல்வரின் தண்டனை, பெற்றோர்களிடத்து புகார், எங்களுக்காக வாதாடிய பெற்றோர் என்று மறக்க முடியாத நினைவுகளை தன்னுள் புதைத்து கொண்டது. நண்பர்கள் இல்லாத ஒரு உலகை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு பட்டாம்பூச்சி பருவமாக அது மாறி போனது.
சிரிக்கவே தெரியாத உயிருள்ள ஜடமாய் இருந்த நான் இவர்களின் அறிமுகத்தால் என் வாழ்வை அர்த்தமுளதாக்கி கொண்டேன். பின்னாளில் நண்பன் ஒருவன் இவள் எங்கள் தோழியாய் கிடைத்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அப்பா என்று சொன்ன போது என் அப்பாவின் முகத்தில் தெரிந்த அந்த பிரகாசம் என் எட்டாம் வகுப்பு நண்பர்கள் எனக்கு கொடுத்த பொக்கிஷம்.
ஒரு சின்ன விஷயம்......ஆனா அதுவே வாழ்க்கையின் பாதையை மாற்றிவிடுகிறது என்பதை எவ்வளவு அழகாய் விவரித்து இருக்கீர்கள் மேடம்? ஆமா......இந்த படத்தில் கூட ஓரத்தில் ஒடுங்கி,ஏதோ வேண்டா வெறுப்பாக அமர்ந்து உள்ளதைப்பார்த்தாலே நீங்கள் மேல் கூறியவற்றை அனுமானிக்க முடிகிறது என்னால்! தொடந்து எழுதுங்கள் சிலசமயம் நான் எழுத முடியா(ஆனால் எழுத நினைத்த) சிலவற்றை(ஒருசில சம்பவங்கள்) மற்றவர்களின் எழுத்தாக பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது !! உங்களின் இந்த அவதாரமும் வெற்றிபெற என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் மேடம் !!!
ReplyDeleteமிக்க நன்றி ஜேசு சார்... உங்களுக்குள்ளும் எழுத்து திறமை இருக்கிறது, வெளிக்கொண்டு வாருங்கள்
Deleteஉங்களுக்குள்ளும் எழுத்து திறமை இருக்கிறது, வெளிக்கொண்டு வாருங்கள் ///இன்னுமா நம்பிகிட்டுஇருக்கீங்க ?
ReplyDeleteசரி பாப்போம்.... யாரும்வந்து அடிக்காத வகையில் எழுத முடியுதான்னு......? (அந்தப்பக்கி உங்களையே இந்த ஓட்டு, ஓட்டுது..... அதாவது உங்க எழுத்துக்களையே,இதுல நான் எழுதி என்னை ஒருவழியாக்கவா?)ஏன்னா ...நமக்குத்தெரிஞ்சதெல்லாம் நக்கல்,நையாண்டி & லொள்ளு etc ........... உள்ளுக்குள் அழுதால் கூட வெளியில் மற்றவர்களை சிரிக்கவைக்க முயற்சிப்பேன் அவ்வளவுதான் !;)
நகைச்சுவை தான் பெரும்பாலும் ரசிக்கப்படுகிறது சார், எனவே கண்டிப்பாக உங்களால் பிறரை ரசிக்க வைக்க முடியும்
Deleteசரி மேடம், முயற்சிக்கிறேன் ......... !
ReplyDelete{நன்றி, தொடர்ந்து எழுதுங்க, நான் என்றும் உங்களின் எழுத்துகளுக்கு ரசிகன் !}
உங்கள் பள்ளிப்பருவம்,மற்றும் உங்களது பொது தொடர்புகள்,எல்லாம் சரி சில சமையல் குறிப்புகள்,சிக்கன நடவடிக்கைகள் சம்பந்தமான கட்டுரைகளும் எழுதலாமே?
ReplyDeleteTHank You Akka.......Nice....Good One Akka
ReplyDelete//http://www.facebook.com/subi.narendran//Subi Narendran மனம் திறந்த எழுத்துக்கள். அனுபவங்களின் நினைவலைகள் சுவாரசியம். வாழ்த்துக்கள் Jeeva Rajaseker.
ReplyDeleteSeptember 30 at 3:31pm · Like · 1
//http://www.facebook.com/yashotha.kanth// Yashotha Kanth வாழ்த்துக்கள் தோழியே ...
September 30 at 4:09pm · Like
//http://www.facebook.com/13radhakrishnan// Radha Krishnan வாழ்த்துக்கள் Jeeva Rajaseker.
September 30 at 4:38pm · Like
//http://www.facebook.com/manikadan// Manikandan Rajendran வாழ்த்துக்கள் அக்கா ..
September 30 at 4:46pm · Like
//http://www.facebook.com/sham.masud// Sham Masud உங்களின் நினைவலைகள் அருமை வாழ்த்துக்கள் அக்கா
September 30 at 4:46pm · Like
//http://www.facebook.com/jafferalijahafar// Jafferali Jahafar வாழ்த்துகள் சகோதரி
September 30 at 5:52pm · Like
//http://www.facebook.com/arunvetrivel//Arun Vetrivel சூப்பரா இருக்கு. தொடர வாழ்த்துக்கள்.
September 30 at 10:00pm via mobile · Like
நன்றி நண்பர்களே
Delete